
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தகாசுரன் என்னும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டான். தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். தேவர்களைப் பெண்கள் போல வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி கட்டளையிட்டான். சிவனிடமிருந்து இருள் என்னும் சக்தியைப் பெற்று உலகத்தையே இருள் மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அசுரனிடம் இருந்து தப்பிக்க சிவபெருமானைச் சரணடைந்தனர். சிவன் பைரவரை உருவாக்கி இருளை மறையச் செய்தார்.

