ADDED : ஜூலை 26, 2021 06:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்புத்துார் அவிநாசி ரோட்டில் தண்டுமாரியம்மன் கோயில் உள்ளது. ஒருசமயம் பிளேக் என்னும் கொடியநோய் இப்பகுதி மக்களை வாட்டவே, இக்கோயில் அம்மனின் தீர்த்தத்தை பருகி குணம் அடைந்தனர். அன்று முதல் இந்த அம்மனை குணபூரணி என அழைத்தனர். அன்னம் தரும் அம்பிகையை அன்னபூரணி என்பது போல நோய் தீர்க்கும் இவரை குணபூரணி என்பது பொருத்தம் தானே!