sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இதோ என் செல்வப்பிள்ளை!

/

இதோ என் செல்வப்பிள்ளை!

இதோ என் செல்வப்பிள்ளை!

இதோ என் செல்வப்பிள்ளை!


ADDED : ஏப் 22, 2011 02:37 PM

Google News

ADDED : ஏப் 22, 2011 02:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநாராயணபுரம் கோயில் உற்சவர் செல்வநாராயணரின் சிலை, ஒரு சமயம் டில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருந்தது. பாதுஷாவின் மகள் நாராயணர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். ராமானுஜர் உற்ஸவரை மீட்க வடநாட்டுக்குப் புறப்பட்டார். இளவரசி அரண்மனையில் இல்லை. பாதுஷாவின் அனுமதியுடன் இளவரசியின் அந்தப்புரத்தில் செல்வநாராயணர் விக்ரஹத்தைக் கண்டார். அவரது கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. ''இதோ! என் செல்வப்பிள்ளை'' என்று உரக்க அழைத்தார். அந்தச்சிலை சின்னஞ்சிறு கண்ணனாக மாறியது. தன் சின்னஞ்சிறு பாதங்களில் சலங்கைகள் ஒலிக்க, ராமானுஜரின் மடியில் வந்து அமர்ந்தார். மீண்டும் விக்ரகமாக மாறிவிட்டார். அதை திருநாராயணபுரம் கோயிலுக்கு கொண்டு வந்தார். அவ்வாறு அவர் திரும்பிய நாளான மாசிகேட்டையன்று 'டில்லி உற்ஸவம்' கொண்டாடப்படுகிறது. பாதுஷாவின் மகள் பெருமாளைத் தேடி நாராயணபுரம் வந்துவிட்டாள். செல்வநாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமானாள். இவள், மூலவரின் பாதத்தில் 'வரநந்தினி' என்ற பெயரில் இருப்பதாக ஐதீகம். நாட்டுப்புறங்களில் வரநந்தினியை 'பீபிநாச்சியார்' என்று குறிப்பிடுவர்.






      Dinamalar
      Follow us