sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அன்னபூரணி வரலாறு

/

அன்னபூரணி வரலாறு

அன்னபூரணி வரலாறு

அன்னபூரணி வரலாறு


ADDED : அக் 27, 2016 03:24 PM

Google News

ADDED : அக் 27, 2016 03:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருமுறை பார்வதி தவ வாழ்க்கை மேற்கொள்ள பூலோகம் வந்தாள். புண்ணியத் தலமான காசியை அடைந்தாள். அங்கு பஞ்சம் நிலவியது. இதைக் கண்டு அந்தத் தாயின் மனம் பொறுக்கவில்லை. தன் தெய்வீக சக்தியால் ஒரு மாளிகையை உருவாக்கி, அதில் அன்னபூரணி என்னும் பெயரில் எழுந்தருளினாள். அமுதம் நிறைந்த அட்சய பாத்திரமும், கரண்டியும் ஏந்தி மக்களுக்கு உணவளித்தாள். மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அவளது புகழ் பரவியது. இதையறிந்த காசிராஜன், அரண்மனைக் காவலர்களை அனுப்பி நிலவரத்தை அறிந்து வரச் சொன்னான்.

அவர்கள் காசிராஜனிடம், “மன்னா! ஆயிரக்கணக்கான மக்கள் அன்னபூரணியிடம் உணவு பெற்றுச் சென்றாலும், அவளது அட்சய பாத்திரத்தில் சிறிதும் உணவு குறையவில்லை” என்றனர். காசிராஜனும், அவனது அமைச்சரும் மாறுவேடத்தில் வந்து மக்களோடு மக்களாக உணவு பெற்றனர்.

அப்போது காசிராஜன், 'அனைவருக்கும் அன்னம் அளிக்கும் இவள் சாதாரணமானவள் அல்ல. ஜகன்மாதாவான பராசக்தியே இங்கு வந்திருக்கிறாள். அவளால் மட்டுமே இப்படி அற்புதம் நிகழ்த்த முடியும்' என்பதை உணர்ந்தான். அப்போது அன்னபூரணி,“காசி ராஜனே!

வருணனின் உதவியால் இனி காசியில் மழை பொழிந்து வளம் பெருகும்,” என்று வாழ்த்தினாள்.






      Dinamalar
      Follow us