ADDED : அக் 20, 2017 03:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் மாவட்டம் வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயிலில், வீடு கட்டுவதற்காக வித்தியாசமான பிரார்த்தனையை பக்தர்கள் செய்கின்றனர். மலைக்குச் செல்லும் வழியில் இடும்பன் சன்னதி உள்ளது. இதனருகே அவ்வையார், முருகன் சிலைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் கற்களை அடுக்கி வைத்து வழிபடுகின்றனர். இதனால் வீடு கட்டும் கனவு, விரைவில் நிறைவேறும் என நம்புகின்றனர். திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில், ஸ்ரீவாரிபாதம் மலையடிவாரப் பகுதியில், இதே போல கற்களை அடுக்கி வழிபடும் வழக்கம் இருக்கிறது.