ADDED : ஆக 17, 2022 11:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவருக்கு செய்யும் மரியாதைகளில் ஒன்றான வணக்கத்திற்கு இவ்வளவு முறைகளா...வணங்குதல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என தர்மசாஸ்திரம் கூறுகிறது.
தலை, இருகை, மோவாய், இருதோள், இருமுழந்தாள் ஆகிய உறுப்புகள் நிலத்தில் படும்படி கடவுளை வணங்குதல். இதை அஷ்டாங்க வணக்கம் என்பர். தலை, இருகை, இருமுழந்தாள் ஆகிய உறுப்புகள் நிலத்தில் படும்படி வணங்குவதற்கு பஞ்சாங்க வணக்கம் என்பர். ஆண்கள் அஷ்டாங்கமும், பெண்கள் பஞ்சாங்கமுமாக கோயில்களில் வணக்கம் செய்வர். குருவை வணங்கும்போது நெற்றிக்கு நேராக கைகூப்பியும், தந்தை, அதிகாரியை வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பியும், அந்தணரை வணங்கும் போது மார்பிற்கு நேராகவும், பெற்றதாயை வணங்கும் போது வயிற்றிற்கு நேராகவும் கைகூப்பி வணங்க வேண்டும்.

