ADDED : செப் 17, 2012 10:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகரை "பிரம்மஹத்தி விநாயகர்' என்பர். இந்த உலகத்திலேயே கொடிய பாவங்கள் எனக் கருதப்படுபவை பசுவையும், பிராமணர்களையும், சாதுக்களையும் கொலை செய்வது, நம்பிக்கை துரோகம் செய்வது, பெண்களை ஏமாற்றியோ, வலுக்கட்டாயமாகவோ கெடுப்பது ஆகியவை. இந்தச் செயல்களைச் செய்தோருக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் பாவம் தீராது. அவர்களது சந்ததியும் நன்றாக இருக்காது. இத்தகைய கொடிய பாவங்களுக்கும் தீர்வளிக்கிறார் பிரம்மஹத்தி விநாயகர். "எங்கள் முன்னோரில் யாரோ செய்த தவறுக்காக எங்களை சோதிக்காதே' என இவரிடம் மனமுருகி கேட்டு பிரார்த்திக்கலாம். முன்னோர்களால் பாதிக்கப் பட்ட குடும்பங்களின் வாரிசு இருந்தால் அவர்களுக்கு வேண்டிய உதவி செய்யலாம். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தோஷம் விலகும்.

