ADDED : அக் 20, 2020 03:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகியுடன் மதுரை புறப்பட்ட கோவலன், வழியில் காளி கோயில் ஒன்றில் இரவில் தங்கினான். அங்கு வந்த வேடுவ பக்தர்கள், ஒரு கன்னிப் பெண்ணை காளியாக அலங்கரித்து வழிபட்டனர். அந்தப் பெண்ணின் விரிந்த கூந்தலை பொன்னிறமான பாம்புக்குட்டி ஒன்றால் இழுத்துக் கட்டினர். அதன் மீது காட்டுப்பன்றியின் கொம்பை மூன்றாம் பிறை போல வைத்தனர். புலிப்பற்களைக் கோர்த்து தாலியாக அணிவித்தனர். புலித்தோலை ஆடையாக உடுத்தி, அப்பெண்ணை கலை மானின் மீது அமரச் செய்தனர். அவள் முன் படையல் வைத்து பூத்துாவி, நறுமணப்புகை இட்டனர். இந்த பூஜையில் கோவலனும், கண்ணகியும் பங்கேற்றதை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் விவரித்துள்ளார்.