
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமஜென்ம பூமி என்று அயோத்தியை அழைப்பது போல டில்லியில் இருந்து ஆக்ரா செல்லும்வழியில் அமைந்த மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளான கோகுல் (ஆய்ப்பாடி), பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களையும் இணைத்து, 'கிருஷ்ண ஜென்மபூமி' என்கின்றனர். இவை முக்கோணவடிவில் அமைந்துள்ளன. ஆழ்வார்கள் இத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளனர். மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, 'ஜென்மபூமி' என்று பெயரிட்டுள்ளனர். இங்கு ஓடும் யமுனை நதி கங்கையைப் போன்று புனிதமானது. இந்த நதியை, 'தூய பெருநீர் யமுனை' என்று திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.

