
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் அக இருள் (மன இருள்) அகல்வதற்கு பாதை போடுகிறது. புத்தாடை அணிந்து, பலகாரம் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து, உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் கொள்ளும் விழாவாக தீபாவளியைக் கருதிவிடக் கூடாது. நம் மேல் நாம் வைக்கும் அன்பைப்போல, நாம் பிறர் மேல் வைக்கும் அன்பும், பண்பும், பாசமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். நம்மை விடப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, நாம் உதவும் விழாவாக தீபாவளி இருக்க வேண்டும்.