ADDED : ஜூன் 21, 2022 11:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமணச்சடங்கில் திருமாங்கல்யம் பூட்டிய பின்னர், சப்தபதி என்னும் சடங்கு நடக்கும். அப்போது மணமகளின் பாதத்தை மணமகன் கைகளால் பற்றி ஏழு அடிகளை எடுத்து வைக்கச் செய்வார். ஒவ்வொரு அடிக்கும் விசஷே பொருள் உண்டு.
1. இருவரும் மனதால் ஒற்றுமையாக இருத்தல்.
2. சுகம், துக்கங்களில் பங்கு கொள்ளுதல்.
3. இருவரின் குடும்பத்தினரை மதித்து நடத்தல்.
4. குழந்தைகளின் ஒழுக்கம், வளர்ச்சிக்கு பாடுபடுதல்.
5. பொருளாதார மேம்பாட்டிற்கு துணை நிற்றல்.
6. ஒருவருக்கொருவர் உண்மையாக நடத்தல்.
7. தம்பதியர் தங்களுக்குள் விட்டுக்கொடுத்தல்.
இதை உணர்ந்து பின்பற்றினால் எல்லா நாளும் திருமண நாளைப் போல இனிமையாக இருக்கும்.

