
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிதேவதை: விநாயகர், சித்ரகுப்தர்
பிரத்யதி தேவதை: பிரம்மா
நிறம்: பல வண்ணம்
வாகனம் : கழுகு
தானியம் : கொள்ளு
மலர்: செவ்வல்லி
ரத்தினம் : வைடூர்யம்
வஸ்திரம் : பல வண்ண ஆடை
நைவேத்யம் : கொள்ளுப்பொடி சாதம்
நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம்,மீனம்
பகை வீடு: கடகம், சிம்மம்
தங்கும் காலம்: 1½ ஆண்டு
சித்திர வண்ணமே திருந்து மேனியும்
அத்துவசம் பொருமணி கொள் காட்சியும்
புத்தொளி மணிமுடிப் பொலிவும் கொண்டருள்
வைத்தமர் கேதுவை வணக்கம் செய்குவாம்.
பலாஸ புஷ்ப ஸங்காஸம்
தாரகா கிரக மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்
புரச மரத்தின் பூவைப் போல சிவந்த நிறம் கொண்டவரே! நட்சத்திரம், கிரகங்களில் தலைமையாக விளங்குபவரே! கோபமே வடிவானவரே! பயங்கரமானவரே! உம்மைச் சரணடைகிறேன்.

