ADDED : பிப் 03, 2017 10:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாசிமகத் திருநாளன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி கடற்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி நடக்கிறது. இதற்கு கடலாடும் விழா எனப்பெயர். மயிலாப்பூரில் வசித்த பூம்பாவை என்ற பெண்ணைத் திருமணம் செய்ய வந்த சம்பந்தர், அவள் இறந்த செய்தி அறிந்தார். அவளை உயிர்ப்பிக்க கபாலீஸ்வரரை வணங்கி,
மடலார்ந்த தெங்கின மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலிச்சரம் அமர்ந்தான்
அடல் ஆணேறு ஊரும் அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்
என்று பாடினார்.
இதிலிருந்து மயிலாப்பூரில் இந்த கடல்நீராடல், நீண்ட நெடுங்காலமாக நடந்து வருவது உறுதிப்படுத்தப்படுகிறது.

