
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவிளக்கு என்றால் அம்மன் நினைவு வந்து விடும். அதுவும் ஆடிவெள்ளி கேட்கவே வேண்டாம். அம்மனை குளிர்விக்க எங்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடுவர்.
பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்துாள் கலந்து காமாட்சி விளக்கு போல செய்து அம்மன் முன் விளக்கேற்றி வைப்பர். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்குவர். இதனால் நோய் நீங்கி ஆயுள் ஆரோக்கியம் பெருகும்.