நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டாள் சன்னதிக்கு முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. பெரியாழ்வாரிடம் வளர்ந்த ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ் தான் வளர்ந்தாளாம். இப்பந்தல் கேரள பாணியில் முழுவதும் மரங்களால் செய்யப்பட்டதாகும். பாசுரங்களில் ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகில் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோல திருப்பாவை காட்சிகளை ஆண்டாள் கோயில் முன்மண்டபத்தில் ஓவியங்களாகவும் காணலாம்.

