ADDED : ஜூன் 02, 2017 01:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடை காலத்தில் வரும் வைகாசி விசாகத்தில் முருகனுக்கு பால்காவடி, இளநீர்க்காவடி செலுத்துவது சிறப்பு. இளநீர், பால் அபிஷேகத்தால் குமரப்பெருமான் மனம் குளிர்ந்து பக்தர்கள் விரும்பும் வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.
தற்போது பால்காவடி இல்லை. அதற்கு பதில் குடத்தில் நிரப்பிய பாலை தலையில் சுமந்தபடி (பால்குடம்) நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தன்று அதிகாலை முதல் உச்சிகால பூஜை வரை ஆறுமுகனுக்கும், வேலுக்கும் பாலாபிஷேகம் நடக்கும்.

