ADDED : நவ 13, 2016 12:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை கோவிலுக்கு விரதமிருந்து செல்லும் ஆண் பக்தர்களை 'ஐயப்பா' என்றும், 'சுவாமி' என்றும் அழைப்பது வழக்கம். இதுபோல பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மலைக்குச் செல்ல அனுமதியுண்டு. இந்த பெண் பக்தர்களை 'மாளிகைப்புறம்' என்று அழைப்பர். ஐயப்பன் கோவில் அருகிலுள்ள மாளிகைப்புறத்தம்மனின் பெயரால், அவர்களை இவ்வாறு அழைக்கின்றனர்.

