
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரவு, பகல் என்னும் இரண்டுக்கும் காரணகர்த்தாவாக இருப்பவர் சூரியன். காலத்தை நிர்ணயிக்கும் தெய்வமான சூரியனைப்பற்றியும், அவர் பவனி வரும் தேரைப் பற்றியும் விஷ்ணு புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சூரியனின் தேர் விசாலமானது. 'காலநேமி' என்னும் ஒற்றைச் சக்கரம் அத்தேரில் இடம்பெற்றிருக்கும். காயத்ரி, ப்ருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி என்னும் ஏழு பச்சைக் குதிரைகள் அதில் பூட்டப்பட்டிருக்கின்றன. சூரியனின் சாரதியாக தேரைச் செலுத்துபவரின் பெயர் அருணன்.