
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரகசுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக,பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர். விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையது. 9 கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப் பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார்.
இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழக்கையிலும், வியாழனை தலையிலும், வெள்ளியை இடதுகீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். இவரை வழிபடுவதால், ஒரே நேரத்தில் எல்லா நவக்கிரகங்களையும் வழிபாடு செய்த பலன் உண்டாகும்.