ADDED : டிச 19, 2021 02:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் கோயிலை தில்லை அம்பலம் என்பர். தில்லைமரம் நிறைந்த காடாக இருந்ததால் சிதம்பரத்திற்கு தில்லைவனம் என பெயர். ஆனால் இப்போது இங்கு இம்மரங்கள் காணப்படவில்லை. சிதம்பரத்திற்குக் கிழக்கேயுள்ள பிச்சாவரம் உப்பங்கழியோரத்தில் தில்லை மரங்கள் உள்ளன. சேந்தனார் திருப்பல்லாண்டு பாடலில், “மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்!” என இத்தலத்தை ' தில்லை' என குறிப்பிடுகிறார். சிதம்பரம் கோயிலில் திருமூலட்டானம் சன்னதியின் மேற்குப் பிரகாரத்தில் கருங்கல்லால் ஆன தில்லை மரத்தைக் காணலாம்.

