
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பாளுக்கு உகந்த நாள் தமிழகத்தில் அம்மன் வழிபாட்டிற்கு வெள்ளிக்கிழமை உகந்த நாளாக உள்ளது. ஆனால், மேற்குவங்காளத்தில் சனிக்கிழமையும், செவ்வாயும் உகந்ததாக கருதப்படுகிறது. தேவி உபாசகர்கள் 'பஞ்சபர்வாக்கள்' என்னும் ஐந்தைச் சிறப்பாகக் குறிப்பிடுவர். பர்வா என்பது நேரத்தைக் குறிக்கும். மாதசங்கராந்தி(மாதப்பிறப்பு), அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, சதுர்த்தசி ஆகியவையே இந்நாட்கள். இந்நாட்களில் வடமாநில அம்மன் கோயில்களில் கூட்டம் அதிகமிருக்கும். இதுதவிர, கிழமைகளில் செவ்வாய், வெள்ளியும், திதிகளில் அஷ்டமி, சதுர்த்தசியும் சிறப்பானவை. நட்சத்திரங்களில் உத்திரம் தேவிபூஜைக்கு உரியது.

