ADDED : செப் 28, 2022 02:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனதில் நம்பிக்கை இருந்தால் நம் வாழ்க்கை நம் கையில்தான். கீழே உள்ள உதாரணங்களின் மூலம் இதை தெரிந்து கொள்ளலாம்.
* ஒரு கிராமத்தில் மக்கள் மழை வேண்டி கடவுளிடம் வேண்டினர். அப்போது ஒருவர் மட்டும் குடை கொண்டு வந்தார்.
* தன் குழந்தையை மேலே துாக்கி போட்டு விளையாடினார் தந்தை. அதற்கு பயப்படாமல் தந்தையை பார்த்து சிரித்தது குழந்தை.
* நாளை நாம் எப்படி இருப்போம் என யாருக்கும் தெரியாது. ஆனாலும் இரவில் அலாரம் வைத்து படுக்கிறோம்.
* நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என தெரிந்தும், எதிர்காலம் குறித்து திட்டம் தீட்டுகிறோம்.

