
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூரனை வென்ற முருகன், நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரையுடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடம் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் 'பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது.