ADDED : டிச 17, 2012 02:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராவணனுடன் போரிடச் சென்ற ராமன் வானர சேனையுடன் சேதுக்கரையை அடைந்தார். கடலைக் கடந்து இலங்கை செல்ல வேண்டி கடலரசனை நோக்கி நாணல் புல்லின் மீது படுத்தபடி மூன்று நாட்கள் தியானத்தில் ஆழ்ந்தார். அந்த இடமே 'திருப்புல்லணை' என்றானது. தற்போது 'திருப்புல்லாணி' எனப்படுகிறது. ஆதிஜெகந்நாதப்பெருமாள் என்பது இவரது திருநாமம். ராமன் வாழ்ந்த திரேதாயுகத்திற்கும் முந்தியவர். இவருக்கு பெரிய பெருமாள் என்ற பெயர் உண்டு. சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். ராவண சம்ஹாரத்திற்கு முன் ஜெகந்நாதரை வழிபட்ட ராமன், வெற்றி பெற்று அயோத்தி திரும்பும் போது மீண்டும் இங்கு வந்தார். இந்தக் கோயிலை மார்கழி மாதம் வழிபட்டால், இரட் டிப்பு பலன் கிடைக்கும் என்பர்.