
எங்கெல்லாம் உன்னுடைய உண்மை குணம் முதலில்
மறுக்க அல்லது மறைக்கப்படுகிறதோ
அங்கெல்லாம் மவுனம் பழகு
நன்றாக பழகி
உறவாடியவர்களே
உன்னை வெறுத்தாலும்,
புறம் பேசி ஒதுக்கினாலும்
அவர்களைப் பற்றி
பேசாதிருக்க மவுனம் பழகு.
ஊரறிய செய்தது குற்றம்
எனப்புரிந்து கொண்டும்
புரியாதது போல்
இருப்பவரிடம்
மவுனம் பழகு.
பிறருக்கு உன் மூலம்
செய்த சிறு நன்றியையும்
எந்தச் சூழ்நிலையிலும்
சொல்லிக்காட்டாமல் இருக்க மவுனம் பழகு.
அருளை வழங்கிட
மவுனம் பழகு.
இரக்கமும்
பொறுமையையும்
வளர்த்திட
மவுனம் பழகு
உண்மையாக
பழகியிருந்தும்
பின்னாளில்
உள்ளொன்று வைத்துப்
புறம் ஒன்று
பேசுபவர்களிடம்
ஏன் என்று கேட்காமல்
இருக்க மவுனம் பழகு.
அன்பை
விதைத்திட
மவுனம் பழகு
அன்பைப் பெற்றிட
மவுனம் பழகு.
அடுத்த நொடி வாழ
வழியில்லாமல் போகும்
நிலை வந்தாலும்,
எல்லாம் இருந்தும்
மனம் உவந்து கொடுக்கும் மனம் இல்லாதவரிடம்
உதவி கேட்காமல் இருக்க மவுனம் பழகு.