
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதன் அடிக்கடி குழப்பத்திற்கு ஆளாகிறான். புத்தியில் தெளிவும், பக்தியில் உறுதியும் எளிதில் வருவதில்லை. குழப்பம் போக்கி, மனிதனை நல்வழிபடுத்த ஆதிசங்கரர் எழுதிய நூல் 'மோக முத்கரம்'. 'மோக முத்கரம்' என்பதற்கு 'ஆசையை உடைக்கும் சம்மட்டி' என்பது பொருள். இந்த
நூலுக்கு 'பஜகோவிந்தம்' என்ற பெயருண்டு. இதைப் படித்தால் பிறவி பெருங்கடலை, சிறு ஓடையை தாண்டுவது போல எளிதில் தாண்டி விடலாம். இதன் முதல் பாடலில் 'பஜ கோவிந்தம்' என்னும் சொல் மூன்று முறை இடம் பெற்றுள்ளது. ஏதேனும் ஒன்றை உறுதிபட சொல்ல விரும்பும் அருளாளர்கள் மூன்று முறை சொல்வது வழக்கம். கோவிந்தா என்னும் திருநாமத்தை பக்தியுடன் சொன்னால் மனம் தூய்மை பெறும் என்கிறார் ஆதிசங்கரர்.

