ADDED : ஜன 06, 2017 10:00 AM

தை மாதம் இரண்டாம் தேதி (ஜன.15) அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மார்க்கண்டேயருக்கு 16 வயதிலேயே உயிர் போக வேண்டும் என இருந்தது. அப்போது சிவன் அவர் தீர்க்காயுள் பெறுவதற்காக, இந்த விரதத்தை அனுஷ்டிக்க சொன்னார். இந்த விரதத்தை, மகாபாரத தலைவரான தர்மரும் அனுஷ்டித்திருக்கிறார். இந்த விரத நாளன்று அதிகாலையில் நீராட வேண்டும். மண்ணில் ஒரு அம்பாள் சிலை செய்து, அதை சாவித்திரி தேவியாக எண்ணி பூஜை செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சு போட்ட கயிறை கையில் கட்டி, அன்று மாலை ஆறு மணி வரை மவுன விரதம் இருக்க வேண்டும், இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். ஒன்பதாம் நாள் மாலையில் ஒன்பது வெற்றிலை, ஒன்பது பாக்கு, ஒன்பது மஞ்சள் கிழங்குகள், ஒன்பது பழங்கள் வைத்து நம்மால் முடிந்தளவு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி வழியனுப்ப வேண்டும். நீண்ட ஆயுள் மட்டுமின்றி செல்வம், குழந்தை பாக்கியத்தையும் இந்த விரதம் தரும்.

