ADDED : ஆக 11, 2016 11:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள மாநிலம் கொடுங்கலூர் பகவதி அம்மன் திருவுருவம் பலாமரத்தால் ஆனது. இதனை 'வரிக்கப்பிலாவு' என்று குறிப்பிடுவர். இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. வாசனை திரவியங்களைப் பூசும் வழக்கமே உண்டு. இதனை 'சாந்தாட்டம்' என்பர். கர்ப்பகிரகம் அருகில் ரகசிய அறை ஒன்று உள்ளது. இதில் என்ன இருக்கிறது என யாருக்கும் தெரியாது. அம்மனுக்கு பூஜை செய்யும் நேரத்தில் அந்த அறைக்கும் பூஜை நடத்துகின்றனர்.

