ADDED : ஜூலை 27, 2014 03:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னோருக்கு மகிழ்ச்சி தரும் பொருட்களில் பிரதானமானது எள். 'தர்பயாமி' என்று சொல்லியபடி, தர்ப்பணத்திற்காக எள் எடுக்கும்போது, ஏழு அல்லது எட்டு எள்ளாவது இருக்க வேண்டும். இதற்கான ஆதாரம் விஷ்ணு புராணத்தில் உள்ளது. பிதுர்லோகத்தில் வாழும் முன்னோர், தர்ப்பணம் செய்யும் போது, ''பூமியில் எங்கள் புத்திரன் பக்தியுடன் வணங்குகிறவனாக ஏழு அல்லது எட்டு எள்ளுடன் கூடிய ஜலத்தால் தர்ப்பணம் செய்யப் போகிறான்'' என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அதில் சொல்லப் பட்டுள்ளது.