ADDED : மார் 22, 2016 02:04 PM

தெய்வத்திருமண நாள் பங்குனி உத்திரத்தன்று மகாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்தாள். அதேநாளில், மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம்பிடித்தாள். சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் இந்த நாளில் தான் நிகழ்ந்தது. ராமபிரான் சீதையையும், அவரது சகோதரர்களான லட்சுமணன், பரதன், சத்ருகனன் ஆகியோர் தங்கள் வாழ்க்கைத் துணைவியராக ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரை அடைந்தததும் இந்த நாளில் தான். முருகப்பெருமான் தெய்வானையை மணந்ததும், அவள் இந்திரனுக்கு வளர்ப்பு மகளானதும் இந்த இனிய நாளில் தான். பிரம்மா தன் மனைவி சரஸ்வதியை நாக்கில் வைத்துக் கொள்ளும் படியான வரத்தை இந்த நாளில் பெற்றார். தன் மனைவி இந்திராணியைப் பிரிந்திருந்த இந்திரன் மீண்டும் அவளுடன் சேர்ந்தது இதே நாளில் தான். இதனால் தான் இதை தெய்வத்திருமண நாள் என்கின்றனர். இந்த நாளில் தான் சிவனுக்கும், திருமாலின் அவதாரமான மோகினிக்கும் சாஸ்தா அவதரித்தார்.

