ADDED : அக் 15, 2012 12:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவனின் தலையில் தான் கங்காதேவியை தரிசித்திருப்பீர்கள். ஆனால், கோவை உக்கடம் உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோயிலில் உள்ள அஷ்டபுஜ துர்க்கையின் தலையில் சிவபெருமானின் திருஉருவம் உள்ளது. சிவனையே தாங்குபவள் என்பதால், இவளுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்றாகிறது. இவளிடம் பக்தியுடன் வைக்கும் நியாயமான கோரிக்கைகள், கிரக தோஷங்களையெல்லாம் தாண்டி வெற்றி பெறும். உதாரணமாக, சர்ப்பதோஷத்தால் திருமணம், மகப்பேறு தடைபடுமானால் இவளை வணங்கி நிவாரணம் பெறலாம்.

