ADDED : ஏப் 15, 2011 11:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சயனத்தில் (தூக்கநிலை) உள்ளார். பார்ப்பதற்கு தவம் போல இருக்கிறது. தூக்கத்தில் தான் ஆனந்தமும் இருக்கிறது. காலையில் நம் வீட்டு குழந்தைகளை எழுப்பும்போது, ''கொஞ்சம் பொறும்மா'' என்று கவிழ்ந்து படுத்து, குட்டித்தூக்கம் போட்டு ஆனந்தப்படுவார்கள். தூக்கத்தில் மட்டுமல்ல, ஆட்டத்திலும், மவுனத்திலும் கூட ஆனந்தமுண்டு. அதனால் தான் சிவபெருமான், நடராஜராக ஆனந்தநிலையிலும், தட்சிணாமூர்த்தியாக மவுனநிலையிலும் உள்ளனர். தூக்கம், ஆட்டம், மவுனம் ஆகிய எந்த நிலையில் இருந்தாலும் சிவனும், விஷ்ணுவும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்கின்றனர். ரங்கநாதர், நடராஜர், தட்சிணாமூர்த்தி ஆகியோரிடையே இன்னொரு ஒற்றுமையும் உள்ளது. மூவருமே தெற்கு திசை நோக்கி உள்ளனர்.