
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணவரை இழந்த ஆதிரை என்னும் பெண்மணி சிவனருளால் கணவரை மீட்டதோடு வான மண்டலத்தில் நட்சத்திர அந்தஸ்தும் பெற்றாள். அவளது பெயரால் திருவாதிரை விழா உண்டானதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கர்ண பரம்பரை கதை வழங்குகிறது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் திருவாதிரை நாளில் புதுமணத் தம்பதியர் சுவாமி தரிசனம் செய்வர். இதனால் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியத்துடன் வாழும் பேறு உண்டாகும்.