sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வியூக மூர்த்திகள்

/

வியூக மூர்த்திகள்

வியூக மூர்த்திகள்

வியூக மூர்த்திகள்


ADDED : ஏப் 22, 2011 02:21 PM

Google News

ADDED : ஏப் 22, 2011 02:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமால் துயில் கொள்ளும் பாற்கடலில் வியூக மூர்த்திகள் எனப்படும் நால்வர் இருக்கின்றனர். இவர்களை ஒரு தூணுக்கு ஒப்பிடுகின்றனர். இதற்கு 'வியூக யூக ஸ்தம்பம்' என்று பெயர். 'ஸ்தம்பம்' என்றால் 'தூண்'. முதல் மூர்த்தி மனிதனின் விழிப்பு நிலையைக் கவனிப்பார். இன்னொருவர் கனவு நிலையைக் கவனிப்பார். மற்றொருவர் ஆழ்ந்த தூக்கநிலையைக் கவனிப்பார். கடைசி மூர்த்தி மயக்கநிலையைக் கவனிப்பார். ஒரு மனிதன் விழித்திருக்கும்போது 'எல்லாம் தானே' என்று மமதை கொள்கிறான். அரைகுறை தூக்கத்தில் காணும் கனவும் உண்மைச் சம்பவம் போலவே அவன் மனதில் படுகிறது. ஆழ்ந்து தூங்கிவிட்டால் இறந்தவனுக்கு சமமானவனாகி விடுகிறான். கண்விழித்ததும் ''உறங்கியதும் நானே, விழித்ததும் நானே, இந்த உலகத்தை நானே இயக்குகிறேன்,'' என்ற மமதை கொள்கிறான். இந்த நிலைகள் மாறி மாறி அவனுக்குள் ஏற்படுகின்றன. இவ்வாறான மமதை மயக்கத்தில் இருந்து, அவனைக் கடத்தி இறைவனுடன் இரண்டறக் கலக்க வைக்கும் பணியை இந்த வியூகமூர்த்திகள் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us