ADDED : ஜூலை 31, 2011 12:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் 'கோதாதேவி அவதார ஸ்தலம்' என்று சிறப்பித்துக் கூறுவர். எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். ஆண்டாள், தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என்ற திருநாமம் பெற்றாள். இன்றும் ஆண்டாளுக்கு சூட்டிய மாலையையே பெருமாளுக்கு அணிவிக்கின்றனர். முதல்நாள் இரவு ஆண்டாளுக்குச் சாத்தப்பட்ட மலர்மாலை, இங்கு பள்ளிகொண்டிருக்கும் வடபத்ரசாயி பெருமாளுக்கு முதல்மாலையாக அணிவிக்கப்படுகிறது.