sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சுகம் தரும் சுக்கிரன்

/

சுகம் தரும் சுக்கிரன்

சுகம் தரும் சுக்கிரன்

சுகம் தரும் சுக்கிரன்


ADDED : பிப் 13, 2021 03:24 PM

Google News

ADDED : பிப் 13, 2021 03:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுகபோக வாழ்விற்கு அதிபதி சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் ஆடம்பர வாழ்வு அமையும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3, 6, 8, 12 ஆகிய ராசிகளில் மறைந்தால் யோகபலன் குறையும். இதற்கான பரிகாரம் செய்தால் வாழ்வு மேம்படும்.

வெள்ளிக்கிழமை மாலையில் விளக்கேற்றி லட்சுமி தாயாருக்கு வெண்பொங்கல், வெள்ளை மொச்சை, சுண்டல் நைவேத்யம் மகாலட்சுமி துதி, மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்ரம் சொல்லி வழிபடலாம். வெள்ளிக்கிழமையன்று சிவாலய தரிசனம், அடியார்களுக்கு அன்னமிடுவது நல்லது. சுக்கிரனுக்கு உகந்த பவுர்ணமி பூஜை, சுவாசினி பூஜை, குமாரி பூஜை, பூச நட்சத்திரத்தன்று செய்யப்படும் புஷ்ய பூஜைகளை செய்வதும் பங்கேற்பதும் நன்மை தரும்.

சுக்கிரனின் ஸ்லோகத்தை பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தன்றோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ 16 முறை சொல்வது மிகவும் நல்லது.

ஹிம்குந்த ம்ருணாலாபம்

தைத்யானாம் பரமம் குரு

சர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்

பார்க்கவம் ப்ரணமாம் யஹம்

பனித்துளி, முல்லை, தாமரை போன்ற மலர்களைப் போல வெண்ணிறம் கொண்டவரே! அசுரர்களின் குருவாக திகழ்பவரே! சாஸ்திர ஞானத்தில் வல்லவரே! பிருகு முனிவரின் புதல்வரே! சுக்கிர பகவானே! உம்மை போற்றுகிறேன்.






      Dinamalar
      Follow us