
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தியை ஆண்ட வம்சம் சூரிய வம்சம். நீதி, நேர்மை தவறாமல் ஆட்சிபுரியும் நல்லவர்கள் பிறந்த குலம் இது. கொடிய துன்ப காலத்திலும், உண்மை பேசிய ஹரிச்சந்திரன், சனி பாதிப்பிலும் வழி தவறாத நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வளித்த திலீபச் சக்கரவர்த்தி, சத்தியம், தர்ம வழியில் வாழ்ந்து காட்டிய ராமர் ஆகியோர் சூரிய குலத் தோன்றல்களே. கர்ணனும் சூரியனின் பிள்ளையே. சூரியனை வழிபடுவோர் அனைவரும் சூரியகுல மன்னர்களின் ஆசி கிடைக்கப் பெறுவர்.