
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கங்கை கொண்ட சோழபுரத்தில் ஞானசரஸ்வதி அருள்புரிகிறாள். அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் இவளது வலது கை ஆள்காட்டி விரல் மேல்நோக்கி நீட்டியபடி 'சூசி' முத்திரையுடன் உள்ளது. 'கடவுளைப் பற்றி அறிவதே மேலானது' என்பது இதன் பொருள். சாந்தமான முகத்துடன் மார்பில் பூணுால், கைகளில் ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் அணிந்தபடி யோகநிலையில் இருக்கும் இவளை வழிபட்டால் நல்லறிவு உண்டாகும்.