ADDED : ஜூன் 20, 2016 10:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூஜையறையில் சுவாமி விக்ரஹம் அல்லது படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். சுவாமி கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் வடக்கு நோக்கி அமர்ந்தும், வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் கிழக்கு நோக்கி அமர்ந்தும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது
சாஸ்திரம். பெண் தெய்வங்களைப் பூஜிக்கும் போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜிப்பது சிறப்பு. அதாவது பராசக்தி மற்றும் மகாலட்சுமி படங்கள் கிழக்கு நோக்கி இருந்தால் மேற்கு நோக்கி அமர்ந்தும், வடக்கு நோக்கி இருந்தால் தெற்கு நோக்கி அமர்ந்தும் வழிபாடு செய்யலாம். அவ்வாறு அமரும் போது அம்மன் படங்களின் முன் நேருக்கு நேராகவும் அமரலாம்.