
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் வடபெருங்கோயிலுடையான் சன்னதி ராஜகோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார். 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. இக்கோபுரம் பற்றி, “திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரம்” என மேருமலை சிகரத்திற்கு இணையான கோபுரம் என்று கம்பர் பாடியுள்ளார்.
பொதுவாக கோயில் கோபுரங்களில் சுவாமிகளின் திருவுருவ சிற்பங்கள் இருக்கும். ஆனால் இக்கோபுரத்தில் சிற்பங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. இக்கோபுரம் தமிழக அரசின் சின்னமாக இருக்கிறது.

