ADDED : அக் 20, 2017 03:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரம்மாவின் புத்திரரான நாரதரை சிலை வடிவில் கோயில்களில் பார்ப்பது அபூர்வம். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சண்முகர் கோயிலில் இவர்
உற்சவராக இருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன், அவரது ஒரு தலையை கொய்தார்.
அப்போது பிரம்மாவின் மகன் நாரதர், தன் தந்தை தவறு செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால், அவர் சிவ நிந்தனைக்கு ஆளானார். அவரது இசைக்கருவியான தும்புரா வளைந்தது. பிறகு விராலிமலை முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தும்புரா வளைந்திருக்கிறது. இக்கோயில் திருவிழாவின்போது, சுவாமி முன்பாக இவர் உலா வருவார்.