ADDED : ஆக 26, 2011 09:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிக்வேதம் பழமையானது. இதில், விநாயகரைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. வேதகாலம் முதல் வழிபடப் பட்டுவரும் பழமையான கடவுள் இவர் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. ரிக்வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில் 'கணபதீம்' என்ற குறிப்பு உள்ளது. இப்பெயரோடு 'ஜ்யேஷ்ட ராஜன்' என்ற பெயரும் இவருக்குண்டு.
இதற்கு 'முதலில் பிறந்தவன்' என்பது பொருளாகும். பார்க்கவ புராணத்தில் லீலா காண்டத்தில் விநாயகரின் அவதாரங்களும் அவருடைய திருவிளையாடல்களும் கூறப்பட்டுள்ளன. கடவுள் மறுப்பு கொள்கை உடைய புத்த, சமண கோயில்களிலும் இவருக்கு இடமுண்டு. தைத்ரீய ஆரண்யகம் இவரை 'தந்தி' என்ற சொல்லால் அழைக்கிறது. 'தந்தோ தந்தி ப்ரசோதயாத்' என்றே காயத்ரி மந்திரம் விநாயகரை குறிப்பிடுவதைக் காணலாம்.