ADDED : டிச 30, 2016 11:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நவக்கிரகங்களே நம் வாழ்வில் நன்மை, தீமையை நிர்ணயிக்கின்றன. இந்த சாதக, பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர். விநாயகரின் பலவித கோலங்களில் நவக்கிரக விநாயகர் சிறப்பு மிக்கது. ஒன்பது கிரகங்களையும் தன்னுள் அடக்கி இருக்கும் இவர் ஆற்றல் மிக்கவராக விளங்குகிறார். சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டவராக இவர் இருக்கிறார். இவரைச் சரணடைந்தால் கிரகதோஷம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

