ADDED : ஜூலை 27, 2014 03:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னோர் வழிபாட்டுக்குரிய நாள் அமாவாசை. அதிலும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு. அன்று தீர்த்தக்கரைகளில் செய்யும் தர்ப்பணத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. தர்ப்பணம் செய்வதற்கு உகந்த நேரத்தை 'குதப காலம்' என்கிறது சாஸ்திரம். அதாவது காலை 11.36க்கு மேல் வரும் நேரமே குதப காலம். இந்த நேரத்திற்கு சற்று முன்னதாக செய்ய விரும்புவோர், 'காந்தர்வ காலம்' எனப்படும் காலை 10.48க்கு தொடங்கலாம். 'உஷத் காலம்' எனப்படும் அதிகாலைப் பொழுதில் தர்ப்பணம் செய்வதற்கான பிரமாணம் சாஸ்திரத்தில் காணப்படவில்லை.