ADDED : அக் 07, 2012 05:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஞ்சமுக (ஐந்து முகம்) ஆஞ்சநேயரை, சனிக்கிழமை, மூல நட்சத்திரம், அமாவாசை நாட்களில் வழிபடுவது சிறப்பு. இவரது ஐந்துமுகங்களுக்கும் தனித்தனி நைவேத்யம் செய்வர். அதற்கு தனித்தனி பலன் உண்டு. வானரமுகம் கிழக்கு நோக்கி இருக்கும். இதற்கு வாழைப்பழம், கடலை படைத்து வழிபட்டால் மனத்தூய்மை உண்டாகும். தெற்குநோக்கிய நரசிம்ம முகத்திற்கு பானகம், நீர்மோர் நைவேத்யம் செய்ய எதிரிகளின் தொல்லை நீங்கும். மனதைரியம் ஏற்படும். மேற்குநோக்கிய கருடமுகத்திற்கு தேன் சமர்ப்பித்து வழிபட முன்செய்த தீவினை நீங்கும். வடக்கு நோக்கிய வராகமுகத்திற்கு சர்க்கரைப்பொங்கல் படைத்தால்,கிரகதோஷம் நீங்கும், செல்வவளம் பெருகும். மேல்நோக்கிய ஹயக்ரீவ முகத்திற்கு அவல், சர்க்கரை, வெண்ணெய் படைத்து வழிபட படிப்பு முன்னேற்றம், வாக்குவன்மை, நல்ல சந்ததி உண்டாகும்.

