ADDED : மார் 24, 2017 10:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் நல்லது, கெட்டதைக் கலந்தே கடமைகளைச் செய்கிறார்கள். இவர்களது செயல்களைக் கண்காணிக்க சிவன், அஷ்டதிக் பாலகர்கள் எனப்படும் எட்டுதிசை காவலர்களை நியமித்துள்ளார். இவர்கள் மனித செயல்களுக்கு சாட்சியாக உள்ளனர். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனப்படும் இவர்களை வழிபாடு செய்வதால் நன்மை உண்டாகும். இவர்கள் லிங்கவடிவில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ளனர்.
இந்திர லிங்கம் - பதவி உயர்வு
அக்னி லிங்கம் - சிறந்த உடல்நிலை
எம லிங்கம் - பாவம் நீங்குதல்
நிருதி லிங்கம் - தைரியம்
வருண லிங்கம் - சீரான மழை
வாயு லிங்கம் - நீண்ட ஆயுள், மனபலம்
குபேர லிங்கம் - செல்வ வளம்
ஈசான லிங்கம் - பிறப்பற்ற நிலை.

