ADDED : செப் 22, 2017 10:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெயின் சமூகத்தினர் சரஸ்வதியை பதினாறு வித வடிவங்களில் வழிபடுகின்றனர். இதனை 'சோடஷவித்யா தேவி' என்று குறிப்பிடுவர். இவர்களின் தலைவியாக இருப்பவள் மகாசரஸ்வதி தேவி. வாக்கு என்னும் சொல்லுக்கு உரியவள் என்பதால் 'வாக்தேவி' என்றும் பெயருண்டு. சமய தத்துவங்களை (ஆகமங்கள்) உயர்ந்த செல்வமாக கருதினர். ஆகம தெய்வமான சரஸ்வதியை 'ஜின ஐஸ்வர்யா' என்று குறிப்பிடுவர். 'ஐஸ்வர்யா' என்றால் 'செல்வம்'.