ADDED : ஜூலை 08, 2014 01:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சிங்க புர' என்னும் வடசொல்லே 'சிங்கப்பூர்' என வழங்கப்படுகிறது. இங்குள்ள தெப்பக்குளத் தெருவில், 1859ல், செட்டியார் முருகன் கோயில் கட்டப்பட்டது. விழாக் காலத்தில் இங்கு நடக்கும் 'அரிகண்டி' என்னும் காவடி வழிபாடு பிரசித்தி பெற்றது. 'அரிகண்டி' என்னும் பெயரைச் சொன்னாலே மெய் சிலிர்த்து விடும். இந்தக் காவடியைச் சுமப்பவரின் வயிற்றிலும், இடுப்பைச் சுற்றிலும் நீண்ட கம்பிகள் செருகப்படும். காவடியின் முழுபாரத்தையும் அந்தக் கம்பிகளே தாங்கியிருக்கும். பக்தியும், மனஉறுதியும் மிக்கவர்களால் மட்டுமே 'அரிகண்டி'காவடியை சுமந்து வர முடியும். தலை முறை தலைமுறையாக ஒரே காவடியைச் சுமந்து வரும் வழக்கமும் இங்குண்டு. இதற்கு 'ஜென்மக்காவடி' என்று பெயர்.