
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாமரனாக இருந்த காளிதாசனுக்கு கவிபாடும் ஆற்றலை வழங்கியவள் உஜ்ஜயினிமாகாளி. விக்ரமாதித்தன், காட்டில் ஆறுமாதம் தங்கி தவம் செய்தும், நாட்டை ஆறு மாதம் ஆட்சி செய்தும் வாழ்ந்தது உஜ்ஜயினியில் தான். அவன் வழிபட்ட காளிகோயில் புனிதமான க்ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. க்ஷிப்ரம்' என்ற சொல்லுக்கு 'சீக்கிரம்' என்று பொருள். இந்நதியில் நீராடினால் எண்ணிய எண்ணம் சீக்கிரம் நிறைவேறும். முன்வினை பாவம் உடனே அகன்று விடும் என்பர். உஜ்ஜயினியில் சிவன் மகாகாளேஷ்வரராக வீற்றிருக்கிறார். பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. மகான்களில் ஒருவரான பத்ருஹரி தவம் செய்து காளியின் திருவடியை அடைந்த குகையும் இங்குள்ளது. உஜ்ஜயினி மகாகாளியைத்தான், தமிழகத்தில் 'உச்சினிமாகாளி' என்கின்றனர்.