
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீராத விளையாட்டுப் பிள்ளை என்று கண்ணனைச் சொல்வார்கள். ஆனால், அவரிடமே விளையாடியவர் விநாயகர். ஒருமுறை கைலாயத்தில் இருந்த தங்கை பார்வதியைக் காண வந்தார் மகாவிஷ்ணு. அப்போது தங்கையின் பிள்ளையான விநாயகரிடம் தன் சக்கரத்தைச் சுழற்றி வேடிக்கை காண்பித்தார். மருமகனான விநாயகரோ, தன் துதிக்கையால் சக்கரத்தை இழுத்து, வாயினுள் அடக்கிக் கொண்டார். எத்தனை சொல்லியும் அடம் பிடித்து, சக்கரத்தை திரும்பத் தரவில்லை. கடைசி முயற்சியாக, மகாவிஷ்ணு தன் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டினார். அதைக் கண்ட சந்தோஷத்தில் விநாயகர் சிரிக்க, சக்கரம் வெளியில் வந்து விழுந்தது. சக்கரம் பெற்றுக் கொண்ட விஷ்ணுவும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.